என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்: பார்த்திபன்

"இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே”.
பார்த்திபன்
பார்த்திபன்@rparthiepan
1 min read

‘டீன்ஸ்’ படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாள்களுக்கு ரூ. 100 மட்டுமே என பார்த்திபன் அறிவித்துள்ளார்.

வித்தியாசமான முறையில் படங்களை இயக்குபவர் இயக்குநர் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கிய ‘இரவின் நிழல்’ படம் 2022-ல் வெளியானது.

அவரது அடுத்தப் படமான ‘டீன்ஸ்’ ஹாரர்-த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை - டி. இமான். இப்படத்தின் பாடல் வரிகளை பார்த்திபன் எழுதியுள்ளார்.

இப்படம் ஜூலை 12 அன்று வெளியாக உள்ளது. இதே நாளில் தான் கமலின் ‘இந்தியன் 2’ படமும் வெளியாகிறது.

இந்நிலையில், “என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்” என்று பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அறிக்கையில், “எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, ஆனால் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 100 மட்டுமே. இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை சராசரியாக ரூ. 150 முதல் 200 வரை இருக்கிறது. எனவே, பார்த்திபனின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in