இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்கறிஞர் புகார்!

புத்த மதத்தை உயர்வாக காட்ட, வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில்...
இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்கறிஞர் புகார்!
இயக்குநர் பா. இரஞ்சித் மீது வழக்கறிஞர் புகார்!
1 min read

தங்கலான் படத்தில் வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி இயக்குநர் பா. இரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் தங்கலான்.

ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாராபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக காட்ட, வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், சர்ச்சையான அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் இயக்குநர் பா. இரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in