ரூ. 100 கோடி வசூலை எட்டிய ‘அரண்மனை 4’
ரூ. 100 கோடி வசூலை எட்டிய ‘அரண்மனை 4’@hiphoptamizha

ரூ. 100 கோடி வசூலை எட்டிய ‘அரண்மனை 4’

2024 -ல் ரூ.100 கோடி வசூலை எட்டிய முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை அடைந்துள்ளது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியானது ‘அரண்மனை’. ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2016-ல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதைத் தொடர்ந்து 2021-ல் இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் 4-வது பாகம் கடந்த மே 3 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு போன்ற பலரும் நடித்தனர். இசை - ஹிப்ஹாப் ஆதி. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் 2024 -ல் ரூ.100 கோடி வசூலை எட்டிய முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை அடைந்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in