பார்வையாளர்களை அதிகரிக்க பிவிஆரின் புதிய திட்டம்!

“விளம்பர நேரத்தை குறைத்து, இன்னொரு காட்சியைத் திரையிடலாம் என்றும் முடிவு செய்துள்ளோம்”.
பார்வையாளர்களை அதிகரிக்க பிவிஆர்-ன் புதிய திட்டம்!
பார்வையாளர்களை அதிகரிக்க பிவிஆர்-ன் புதிய திட்டம்!ANI

பார்வையாளர்களை அதிகரிக்க பிவிஆர் நிறுவனம் புதிய திட்டத்தை செயலபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுவாக திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும் ஒரு சில விளம்பரங்கள், அடுத்தப் படத்திற்கான டிரெய்லர்கள் மட்டுமே போடப்படும்.

ஆனால், இப்போது விளம்பரங்கள் மட்டுமே அதிகமாகப் போடப்படுகின்றன. இதனால் சில திரையரங்குகளில் படத்தைத் தொடங்க 20- 30 நிமிடங்கள் வரை தாமதமாகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளைக் கொண்டுள்ள பிவிஆர் நிறுவனம் பார்வையாளர்களை அதிகரிக்க புதிய திட்டத்தை செயலபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து பிவிஆர் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுள் ஒருவரான ரெனாட் பாலியர், “இனி விளம்பர நேரத்தை குறைக்கவுள்ளோம். இந்த நேரத்தை மிச்சம் செய்து இன்னொரு காட்சியைத் திரையிடலாம் என்றும் முடிவு செய்துள்ளோம். குறிப்பாக இடைவேளை நேரங்களில் நாங்கள் திரையிடப் போகும் அடுத்தப் படங்களுக்கான டிரெய்லரை மட்டுமே போடவுள்ளோம்.

இதன் மூலம் மற்ற படங்கள் இங்கு திரையிடப்படுவதைப் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தி, பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருவதை அதிகரிக்கலாம். மேலும், இதன் மூலம் இடைவேளை நேரங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் வருமானத்தையும் அதிகரிக்கலாம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in