அடுத்த சூப்பர்மேன் படம்: ஜேம்ஸ் கன் அறிவிப்பு | Superman | James Gunn |

மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், 2-வது முறையாக சூப்பர்மேன் படத்தை இயக்குகிறார்...
அடுத்த சூப்பர்மேன் படம்: ஜேம்ஸ் கன் அறிவிப்பு | Superman | James Gunn |
படம் : https://x.com/JamesGunn
1 min read

உலக அளவில் புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் அடுத்த படமான ’மேன் ஆஃப் டுமாரோ’ 2027-ல் வெளியாகும் என்று ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஹீரோ படம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சூப்பர்மேனும் ஸ்பைடர் மேனும்தான். வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட சூப்பர்மேன், தனக்குள்ள அசாத்திய சக்தியைக் கொண்டு உலகத்தைக் காக்கும் வீரனாக உருவெடுப்பதே சூப்பர்மேன் கதையின் களம். இந்தக் கதைக்களத்தைப் பின்னணியாகக் கொண்டு பல்வேறு இயக்குநர்களால் பல்வேறு கதைகளை மையமாக்கி சூப்பர்மேன் படங்கள் வெளியாகியுள்ளன.

காமிக்ஸ் கதாபாத்திரமாக முதலில் வடிவமைக்கப்பட்ட சூப்பர்மேன், 1948-ல் முதன்முதலில் படமாக வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்தது. அதன்பின் அடுத்தடுத்து பல சூப்பர்மேன் படங்கள் தயாரிக்கப்பட்டன. கிர்க் அலைனில் தொடங்கிய சூப்பர்மேன் நாயகர்களின் பட்டியல், ஜார்ஜ் ரீவ்ஸ், கிறிஸ்டோபர் ரீவ்ஸ், ஹென்றி காவில், டேவிட் க்ராஸ்வெட் என இதுவரை 6 சூப்பர்மேன்களைக் காட்சிப்படுத்தியுள்ளது.

இதில் குறிப்பாக டிசி காமிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் 2013-ல் மேன் ஆஃப் ஸ்டீல் படத்தின் மூலம் சூப்பர்மேன் படங்களை கையில் எடுத்தது முதல், ஹென்றி காவில் சூப்பர்மேன் கதாபாத்திரத்துக்காக மிகவும் பிரபலமடைந்தார். மேன் ஆஃப் ஸ்டீல், பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ், ஜஸ்டிஸ் லீக், ஸாக் சிண்டர்ஸ் ஜஸ்டிஸ் லீக் ஆகிய நான்கு படங்களும் அந்த வரிசையில் பிரம்மாண்ட வெற்றி பெற்றன.

இந்நிலையில் ஸ்கூபி டூ மற்றும் பிரபல மார்வெல் படங்களான கார்டியன்ஸ் ஆஃப் கேலக்சி போன்ற படங்களை இயக்கிய புகழ் பெற்ற ஜேம்ஸ் கன், சூப்பர் கேர்ள், சூப்பர்மேன் என இரண்டு படங்களை இயக்கினார். சூப்பர்மேன் சென்ற மாதம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் இன்னும் மாறாத உற்சாக வரவேற்பைப் பெற்றது. அதன் அடுத்தக்கட்டமாக சூப்பர்மேனை வைத்து இன்னொரு படம் வெளியாகும் என்று ஜேம்ஸ் கன் அறிவித்திருக்கிறார். சூப்பர் மேன் - மேன் ஆஃப் டுமாரோ என்று அதற்கு தலைப்பு இடப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வரும் 2027 ஜூலையில் வெளியாகும் என்று ஜேம்ஸ் கன் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு சூப்பர் ஹீரோ படங்களின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Superman | Superman Movies | Superhero Movies | Jamess Gunn | DC Movies | Marvel Movies | Man of Tomorrow | Superman movies so far |Henry Cavill |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in