
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருதாணி, மகாலட்சுமி, பொன்னி, பாக்கியலட்சுமி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நேத்ரன்.
சின்னத்திரையில் 25 வருட அனுபவம் பெற்ற நேத்ரன், கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் நேத்ரனின் மறைவு குறித்து சின்னத்திரை நடிகர் ராஜ்கமல், “மலைக்கு போயிட்டு வரேனு சொன்னேன்ல.. என்னடா நீ..” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நேத்ரனின் நெருங்கிய நண்பரான டிங்கு, சின்னத்திரை நடிகை ரேகா உள்பட பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.https://www.instagram.com/p/DDH9Jbpy4Mf/?igsh=N3p4c2M1emhkdHVm