அதிக செலவில் உருவாக்கப்பட்டுள்ள இணைய தொடர் ‘ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’: எவ்வளவு தெரியுமா? | Netflix | Stranger Things |

பாக்ஸ் ஆபீஸில் அவெஞ்சர் எண்ட் கேமையும் விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
அதிக செலவில் உருவாக்கப்பட்டுள்ள இணைய தொடர் ‘ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’
அதிக செலவில் உருவாக்கப்பட்டுள்ள இணைய தொடர் ‘ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’https://x.com/netflix
1 min read

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் புகழ்பெற்ற ஸ்டிரேஞ்சர் திங்ஸ் இணைய தொடரின் கடைசி சீசன் வெளியாகியுள்ள நிலையில், அதை எடுக்க ரூ. 3,300 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸ் கடந்த 2016 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. டஃபர் பிரதர்ஸ் இயக்கியுள்ள இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட தொடர்களின் பட்டியலில், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது ஸ்டிரேஞ்சர் திங்ஸ். வெளியான முதல் நான்கு சீசன்களும் ரசிகர்களை அடுத்த சீசனுக்கான காத்திருப்பை நோக்கி வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 26 அன்று ஐந்தாவது சீசன் வெளியானது.

இந்நிலையில் ஐந்தாவது சீசன் படப்பிடிப்புக்கு மட்டும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 3,300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுவரையிலான அனைத்து சீசன்களையும் சேர்த்து மொத்தம் ரூ.7,000 கோடியை நெட்பிளிக்ஸ் செலவளித்துள்ளதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் சீசன் 48 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள சீசன் 400 - 480 மில்லியன் டாலருக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்ஸ் ஆபீஸில் இந்தத் தொடர் அவெஞ்சர் எண்ட் கேமையும் விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள், நடிகர்கள் பலரது சம்பளம், விஎஃப்எக்ஸ் ஆகியவை காரணத்தால் இந்த செலவு ஆகியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. கடைசி சீசன் மூன்று பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நான்கு எபிசோடுகளைக் கொண்ட முதல்பாகம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த பாகம் டிசம்பர் 25 அன்றும், மூன்றாம் பாகம் டிசம்பர் 31 அன்றும் வெளியாகவுள்ளன.

Summary

As the final season of Netflix's popular OTT platform Stranger Things has been released, it has been reported that it cost Rs 3,300 crore to make.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in