
நயன்தாரா - கவின் இணைந்து நடிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷ்ணு எடவன். சமீபத்தில் வெளியான மதராஸி, கூலி, வேட்டையன், விடாமுயற்சி, லியோ ஆகிய படங்களில் சில பாடல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக கூலி படத்தில் இவர் எழுதிய மோனிகா பாடல் மிகவும் பிரபலமடைந்ததாகும். விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘ஹாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகன் - கவின். இசை - ஜென் மார்டின். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இந்நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ”அனைத்து உன்னதமான உறவுகளும் எளிமையான ஹாய் என்கிற சொல்லில்தான் தொடங்குகிறது” என்ற பதிவுடன் விஷ்ணு எடவன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.