
நடிகை நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திரையுலகில் உள்ளவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தங்களின் முகத் தோற்றத்தை மாற்றுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நயன்தாரவும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியானது. இதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதனை அழகுபடுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். கடந்த ஆண்டுகளில் அதில் நிறைய வித்தியாசம் தெரிவதால், என் முகத்தில் நான் ஏதோ மாற்றம் செய்திருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக எனது உடல் எடை மற்றும் கன்னங்களில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, நீங்கள் என்னை கிள்ளி பார்க்கலாம், எரித்து கூட பார்க்கலாம். அப்படி செய்தால் பிளாஸ்டிக் இல்லை என்பது தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.