2023-ன் சிறந்த படங்களில் ஒன்று ‘சித்தா’ – நயன்தாரா

நயன்தாரா
நயன்தாராANI

2023-ன் இறுதியை எட்டியுள்ள வேளையில், இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று ‘சித்தா’ என நயன்தாரா கூறியுள்ளார்.

எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் செப்டம்பர் மாதம் வெளிவந்த படம் ‘சித்தா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு மாதத்திற்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளிவந்த இப்படத்தை நயன்தாரா பாராட்டியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில், "சித்தா - 2023-ன் சிறந்த படங்களில் ஒன்று. சித்தார்த், இது உங்களின் தலைசிறந்த படம். இயக்குநர் அருண்குமார், என்ன ஒரு அற்புதமான கலைப் படைப்பை உருவாக்கியுள்ளீர்கள். இப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்." என்றார் நயன்தாரா.

மேலும் சந்தோஷ் நாராயணனின் இசையை விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in