தேசிய விருதுகள் 2023: 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங்! | National Awards

அட்லி இயக்கிய ஜவான் படத்துக்காக நடிகர் ஷாருக்கான் தேசிய விருதை வென்றுள்ளார்.
தேசிய விருதுகள் 2023: 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங்! | National Awards
1 min read

2023-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படம் மூன்று விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.

71-வது தேசிய திரைப்பட விருதுகள் புதுதில்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. சிறந்த படத்துக்கான தேசிய விருதை 12th Fail (12த் ஃபெயில்) வென்றுள்ளது.

சிறந்த முன்னணி நடிகருக்கான தேசிய விருதை அட்லி இயக்கிய ஜவான் படத்துக்காக ஷாருக்கான் மற்றும் 12th Fail படத்துக்காக விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோர் வென்றுள்ளார்கள். இதன்மூலம், நடிகர் ஷாருக்கான் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விருதை வென்றுள்ளார்.

தமிழில் பார்க்கிங் படம் சிறந்த தமிழ்ப் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் ஆகிய பிரிவுகளில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருதை வென்றார்.

தமிழுக்குக் கிடைத்த விருதுகள்

  • சிறந்த தமிழ்ப் படம்: பார்க்கிங்

  • சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)

  • சிறந்த துணை நடிகர்: எம்எஸ் பாஸ்கர் (பார்க்கிங்)

  • சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): ஜி.வி. பிரகாஷ் (வாத்தி)

  • சிறந்த ஒளிப்பதிவு (திரைப்படம் அல்லாத பிரிவு): சரவணமருது சௌந்தரபாண்டி, மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ்)

சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதை அனிமல் படம் வென்றுள்ளது. மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு படத்துக்காக சிறந்த துணை நடிக்கைக்கான தேசிய விருதை ஊர்வசி வென்றுள்ளார். Mrs. Chatterjee vs Norway படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ராணி முகர்ஜி வென்றுள்ளார்.

சர்ச்சைகளுக்கு வழிவகுத்த தி கேரளா ஸ்டோரி படம் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் இரு தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தெலுங்கு படமாக பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மலையாளப் படமாக உள்ளொழுக்கு தேர்வாகியுள்ளது.

National Awards | National Awards 2023 | Parking | Parking Movie | MS Bhaskar | Best Screenplay | Best Music Director | GV Prakash | Shah Rukh Khan | Urvashi |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in