.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
எல்லோருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்லுவார்கள் அந்த நேரத்திற்காக நகுல் காத்துக்கொண்டிருக்கிறார் என்று தேவயானி பேசியுள்ளார்.
நகுல், கே.எஸ். ரவிக்குமார், முனிஷ்காந்த் உட்பட பலரும் நடித்துள்ள படம் ‘வாஸ்கோடகாமா’. இப்படம் ஆகஸ்ட் 2 அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நகுலின் சகோதரியான நடிகை தேவையானி தனது தம்பி குறித்து பேசிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அவர் பேசியதாவது
“ஒரு அக்கா, ஒரு தம்பி என இரண்டு பேரும் திரைத்துறையில் இருப்பது அபூர்வமான ஒன்று.
நான் அவருக்கு அக்கா இல்லை, அம்மா தான். நான் அவரோடு விளையாடியதில்லை. சண்டை போட்டதில்லை. நிறைய உணர்வுகளை இழந்திருக்கிறேன். அவரை மிகவும் மிஸ் செய்திருக்கிறேன்.
எல்லோருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்லுவார்கள் அந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார் நகுல். அது கண்டிப்பாக வர வேண்டும். இப்படத்துடன் அவரின் காத்திருப்பு முடிவடைய வேண்டும்” என்றார்.
தேவயானி பேசியபோது மேடையில் அமர்ந்திருந்த நகுல், தனது அக்காவின் பேச்சைக் கேட்டு கண்கலங்கினார்.
இதன் பிறகு எழுந்து வந்து அக்காவைக் கட்டி அணைத்தபடி அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.