சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலங்கான அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு எதிராக, நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமந்தா - நாக சைதன்யாவின் பிரிவுக்கு தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று கொண்டா சுரேகா கூறியதைத் தொடர்ந்து இந்த கருத்துக்கு சமந்தா, நாக சைதன்யா, நாகார்ஜுனா உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, அமைச்சர் சுரேகா தனது கருத்தை திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்க வேண்டும் என கே.டி. ராமாராவ் நோட்டீஸ் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து சமந்தா விவாகரத்து குறித்த கருத்துக்கு அமைச்சர் கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்த எக்ஸ் பதிவில், “பெண்களை இழிவுபடுத்தும் ஒரு தலைவரின் அணுகுமுறை குறித்தே கேள்வி எழுப்பினேனே தவிர, உங்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அவற்றை கேட்கவில்லை” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு எதிராக நாகார்ஜுனா ஐதராபாதில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
2017-ல் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா 2021-ல், அவரை விவாகரத்து செய்திருந்தார்.