பிரபல நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2017-ல் சமந்தாவை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, 2021-ல் அவரை விவாகரத்து செய்தார்.
இதைத் தொடர்ந்து நாக சைதன்யாவும், பொன்னியின் செல்வன் படம் மூலம் பிரபலமடைந்த சோபிதாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், நிச்சயதார்த்தம் குறித்து சோபியா, நாக சைதன்யா ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.