நடிகர் சங்க கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இணைந்து நடிப்பார்கள் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
மேலும், இதில் பேசிய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் ஆகியோர் சேர்ந்து நடிக்கவுள்ளதாகவும், நடிகர் சங்கத்திற்கு விஜய் ரூ. 1 கோடி வழங்கியதாகவும் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கமல் போன்றோரும் நிதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், நடிகர் சங்க நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.