மிஷ்கின் இயக்கம் மற்றும் இசையில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’

ஏற்கெனவே, டெவில் என்கிற படத்திற்கு மிஷ்கின் இசையமைத்தார்.
மிஷ்கின் இயக்கம் மற்றும் இசையில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’
1 min read

மிஷ்கின் இயக்கும் ‘டிரெயின்’ படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ போன்ற பல படங்களை இயக்கியவர் மிஷ்கின்.

மிஷ்கின் புதிதாக இயக்கி வரும் படம் - டிரெயின். இப்படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஒளிப்பதிவு - ஃபவுசியா. முதல் பார்வை போஸ்டர் கடந்த நவம்பரில் வெளியானது.

இந்நிலையில் டிரெயின் படத்துக்கு மிஷ்கின் இசையமைக்கவுள்ளார். ஏற்கெனவே, டெவில் என்கிற படத்திற்கு மிஷ்கின் இசையமைத்தார்.

மிஷ்கின் இயக்கி இன்னும் வெளிவராத பிசாசு 2 படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சைக்கோ படத்தின்போது இளையராஜாவுக்கும் மிஷ்கினுக்கும் கருத்துவேறுபாடு தோன்றியதால் பிசாசு 2 படத்துக்கு கார்த்திக்ராஜா இசையமைத்தார். தற்போது தானே இசையமைக்க முடிவெடுத்து புதிய பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளார் மிஷ்கின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in