

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் சமுத்திரம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தவருமான சபேஷ் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.
தமிழக சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இணை சபேஷ் - முரளி. இவர்கள் இணைந்து சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார், இம்சை அரசன் 23ம் புலிக்கேசி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இவ்விருவரும் இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர்கள்.
இந்நிலையில் சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் சபேஷ் காலமானார். அவர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவரது உடல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.