நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்

வருகிற 29 அன்று நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்
நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்ANI

ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2023-ல் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஃபேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால், தங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ஃபேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 29 அன்று நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in