மலையாளத் திரையுலகின் உச்ச நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
கடந்த 2008-ல் வெளியான டிவெண்டி:20 படத்தில் மம்மூட்டியும் மோகன் லாலும் இணைந்து நடித்தனர். ஏற்கெனவே ஒரு சில படங்களில் இணைந்து நடித்த இவ்விருவரும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். டேக் ஆஃப், மாலிக் போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், நயன்தாரா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, அபுதாபி, தாய்லாந்து, ஹைதராபாத், தில்லி, கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.