ரஹ்மான் நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார்: முதல்வர் தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்...
ரஹ்மான் நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார்: முதல்வர் தகவல்
1 min read

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நலமுடன் உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலையில் ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஹ்மான், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில் ரஹ்மானின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.

அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். மகிழ்ச்சி என்று ரசிகர்களுக்கு ஆறுதலான தகவலை அவர் அளித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in