கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019-ல் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக நடித்துக் கவனம் பெற்றவர் மேகா ஆகாஷ். இதன்பிறகு பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ், கடைசியாக, மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளார் மேகா ஆகாஷ். தனது காதலரும், வருங்காலக் கணவருமான சாய் விஷ்ணுவையும் அவர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சு. திருநாவுக்கரசரின் மகன் தான் சாய் விஷ்ணு. இருவரும் இணைந்து 2020-ல் வெளியான குறும்படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணுவின் திருமணம் செப்டம்பர் 15 அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. இத்திருமணத்தில் தமிழக முதல்வர், காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.