ரஷ்யாவின் கினோ பிராவோ திரைப்பட விழாவில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் திரையிடப்படுகிறது.
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சோபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் போன்ற பலர் நடித்த படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’.
கடந்த பிப். 22 அன்று வெளியான இப்படம், உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இந்த இலக்கை எட்டிய முதல் மலையாளப் படம் எனும் பெருமையை பெற்றது.
இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் ரஷ்யாவின் கினோ பிராவோ திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த விழாவில் திரையிடப்படும் முதல் மலையாளப் படம் என்ற பெருமையும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்துக்கு கிடைத்துள்ளது.