குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' பற்றி ஜெயமோகன்!

மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது.
குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்: 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' பற்றி ஜெயமோகன்!

மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தைத் தனது வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன்

தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள மலையாளப் படம் - மஞ்ஞும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கிய இப்படத்தில் சோபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கேரளத்திலிருந்து வந்த இளைஞர்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தையை வெளிப்படுத்தியுள்ளது இப்படம். குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இந்தப் படம் தற்போது தமிழ்நாட்டிலும் அதிகளவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தைப் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், கடுமையாக விமர்சனம் செய்து தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி

ஆனால் யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன் என்றார்.

ஜெயமோகன் கட்டுரை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in