ராமர் கோயில் திறப்பு: கவனம் ஈர்த்த மலையாளத் திரை நட்சத்திரங்களின் பதிவு
படம்: https://www.instagram.com/par_vathy/

ராமர் கோயில் திறப்பு: கவனம் ஈர்த்த மலையாளத் திரை நட்சத்திரங்களின் பதிவு

Published on

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி மலையாளத் திரை நட்சத்திரங்கள், அரசியலமைப்பின் முகப்புரையைப் பகிர்ந்துள்ளது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை கோயிலில் நிறுவப்பட்டது. பிரதமர் பல்வேறு சிறப்புப் பூஜைகளை செய்து வழிபட்டார். இந்த விழா நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேரலை செய்யப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டியுள்ளதாக விழாவைப் புறக்கணித்தவர்களும் உள்ளார்கள்.

இந்த நிலையில், மலையாள திரை நட்சத்திரங்களான நடிகைகள் பார்வதி, ரிமா கல்லிங்கல், திவ்ய பிரபா, கனி கஸ்ருதி, இயக்குநர்கள் ஜியோ பேபி, ஆஷிக் அபு, பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்டோர் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மதச்சார்பற்ற நாடு என உறுதி கொண்டிருப்பது இடம்பெற்றுள்ள நிலையில், மலையாளத் திரை நட்சத்திரங்கள் இதைப் பகிர்ந்துள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in