பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் | Sreenivasan |

சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்த ஸ்ரீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்...
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்Wiki Commons
1 min read

புகழ்பெற்ற மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

கேரளாவின் தலச்சேரியில் 1956 ஏப்ரல் 6 அன்று பிறந்தவர். இவரது தந்தை ஆசிரியர். கேரளாவில் தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாட்டில் நடிப்புக்கலை பயின்றவர். 1977-ல் மணிமுழக்கம் என்ற படம் மூலம் அறிமுகமான இவர், 225 படங்களில் நடித்துள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். சினிமா நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஸ்ரீனிவாசன், தேசிய விருது பெற்ற வடக்கினோக்கியந்திரம், சிந்தா விஷ்டயாய ஷியாமளா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இவருக்கு விமலா என்ற மனைவி, மலையாளத்தில் பிரபல இயக்குநர் - நடிகராக இருக்கும் வினீத் ஸ்ரீவாசன் என்ற மூத்த மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியான் ஸ்ரீனிவாசன் என்ற இளைய மகனும் உள்ளார்கள். சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இவரது மறைவையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்களும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Renowned Malayalam actor, film director and screenwriter Srinivasan passed away today (Dec. 20) after being admitted to a private hospital in Ernakulam due to ill health. He was 69.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in