என்ன ஒரு படம்: விஜய் சேதுபதியின் 'மகாராஜா'வுக்குக் குவியும் பாராட்டுகள்!

இப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும்.
மகாராஜா படத்திற்கு குவியும் பாராட்டுகள்!
மகாராஜா படத்திற்கு குவியும் பாராட்டுகள்!
1 min read

மகாராஜா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களுக்கான காட்சி முடிந்தப்பின், இப்படம் நேர்மறையான கருத்துகளைப் பெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் மகாராஜா படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து படம் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.

விஜய் சேதுபதியின் நடிப்பு, நித்திலனின் இயக்கம் சிறப்பாக அமைந்ததாகவும் அதேபோல, படத்தில் நிறைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தாண்டின் சிறந்த படம் மகாராஜா என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in