‘ஹாரி பாட்டர்’ புகழ் மேகி ஸ்மித் காலமானார்!

2 ஆஸ்கர், 4 எம்மி உள்பட பல விருதுகளை வென்றிருக்கிறார்.
மேகி ஸ்மித் காலமானார்!
மேகி ஸ்மித் காலமானார்!
1 min read

ஹாரி பாட்டர் படங்களின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மேகி ஸ்மித் காலமானார். அவருக்கு வயது 89.

1950-களில் மேடை நடிப்பு மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார் மேகி ஸ்மித். ஹாரி பாட்டர் படங்களில் புரொஃபசர் மெக்கோனகல் என்கிற கதாபாத்திரம் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்த இவர், 1969-ல் வெளியான ‘தி ப்ரைம் ஆஃப் மிஸ் ஜீன் ப்ரோடி’ மற்றும் 1978-ல் வெளியான ‘கலிஃபோர்னியா சூட்’ ஆகிய படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்றார். இது தவிர 4 எம்மி விருது உள்பட பல விருதுகளை வென்றார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேகி ஸ்மித் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in