
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், அவருடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக, நடுவராகப் பங்கேற்று வருகிறார். பிரபலங்களின் திருமணம், முக்கிய விழாக்கள் என்றால் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் ஒப்பந்தம் செய்யப்படுவது பெரியளவில் பேசப்படுவதுண்டு.
இவருக்கும் வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி இடையே மனக்கசப்பு இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது ஆடை வடிவமைப்பாளர் ஜாஸ் கிறிசில்டாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
திரைத் துறையில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார் ஜாய் கிறிசில்டா. பிரபலங்களுக்கான ஸ்டைலிஸ்டாகவும் உள்ள ஜாய் கிறிசில்டா, திரைத் துறையில் விஜய், சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜிவி பிரகாஷ், அனிருத், ரெஜினா கேஸன்ட்ரா, ஷ்ரதா ஸ்ரீநாத், ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோருக்கு ஸ்டைலிஸ்டாக பணியாற்றியுள்ளார். குக் வித் கோமாளியில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
திருமணப் புகைப்படங்களைத் தற்போது பகிர்ந்துள்ள ஜாய் கிறிசில்டா, கருவுற்று 6 மாதங்கள் ஆகியுள்ளதாகவும் 2025-ல் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜாய் கிறிசில்டாவுக்கு கடந்த 2018-ல் இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் என்பவரைத் திருமணம் செய்தார். இது விவாகரத்தில் முடிந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஸ்ருதிக்கு விவாகரத்து ஆனது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Joy Crizildaa | Madhampatty Rangaraj | Sruthi