துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌதரி உள்பட பலர் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் கடந்த அக்.31 அன்று வெளியானது. இசை - ஜி.வி. பிரகாஷ்.
இதே தினத்தில் அமரன் படம் வெளியாகி இருந்தாலும், முதல் நாளில் இருந்தே ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாநதி, சீதா ராமம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து ‘லக்கி பாஸ்கர்’ படமும் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.