தேர்தலில் சௌமியா அன்புமணி வெற்றி பெற விரும்பினேன்: லிங்குசாமி

"அன்புமணி ராமதாஸின் இரண்டு மகள்களும் அவ்வளவு அழகாக தங்களின் அம்மாவுக்காக வாக்கு சேகரித்தனர்".
லிங்குசாமி
லிங்குசாமி

மக்களவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி வெற்றி பெற விரும்பியதாக இயக்குநர் லிங்குசாமி பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பேட்மிண்டன் தொடர்பான நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், லிங்குசாமி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய லிங்குசாமி, “தேர்தல் நேரத்தில் பெரும்பாலும் நான் முடிவுகளைப் பார்க்கமாட்டேன். ஆனால், ஒரு தொகுதியை மட்டும் ஆர்வமாக பார்த்தேன். என்னுடைய குழந்தைகள் போலவே, அன்புமணி ராமதாஸின் இரண்டு மகள்களும் அவ்வளவு அழகாக தங்களின் அம்மாவுக்காக வாக்கு சேகரித்தனர். அந்த ஒரு காரணத்துக்காக சௌமியா அன்புமணி அந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், கடைசி நிமிடத்தில் அது நடக்காமல் போனது” என்றார்.

மக்களவைத் தேர்தலில் பாமக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in