விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’

ஆரம்பத்தில், இப்படத்துக்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று பெயரிடப்பட்டிருந்தது.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’@pradeeponelife
1 min read

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்துக்கு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, யோகி பாபு போன்ற பலரும் நடிக்கும் படம் 'எல்.ஐ.கே'. இசை - அனிருத்.

ஆரம்பத்தில், இப்படத்துக்கு சுருக்கமாக எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தான் பெயரிடப்பட்டது. ஆனால், இந்த தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், தலைப்பை மாற்ற சொல்லி எல்.ஐ.சி நிறுவனம் சார்பாக நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் படத்தின் தலைப்பை எல்.ஐ.சி-க்கு பதில் எல்.ஐ.கே என்று மாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in