
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் இன்று தொடங்கியது.
இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் பருவம் 8 இன்று தொடங்கியது. விஜய் சேதுபதி, பிக் பாஸ் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தமுறை பிக் பாஸ் இல்லம் ஆடவர், மகளிர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்முறை நிகழ்ச்சி கூடுதல் சுவாரசியத்துடனும் பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவிந்தர் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.
2. நடிகை சச்சனா
3. நடிகை தர்ஷா குப்தா
4. நடிகர் சத்யா
5. நடிகர் தீபக்
6. நடிகை, ஆர்ஜே ஆனந்தி
7. நடிகை சுனிதா
8. பாடகர் ஜெஃப்ரி
9. நடிகர் ரஞ்சித்
10. நடிகை பவித்ரா ஜனனி
11. நடிகை செளந்தர்யா நஞ்சுண்டன்
12. நடிகர் அருண் பிரசாத்
13. நடிகை தர்ஷிகா
14. நடிகர், விஜே விஷால்
15. நடிகை அன்ஷிதா
16. நடிகர் அர்னவ்
17. தொகுப்பாளர் முத்துக்குமரன்
18. ஜாக்குலின்