இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ படம் ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’. இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கிய இப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் ‘கொட்டுக்காளி’ ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.