2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ‘லாபத்தா லேடீஸ்’ படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் இந்தியா சார்பாக ‘லாபத்தா லேடீஸ்’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பாக 12 ஹிந்திப் படங்கள், 6 தமிழ்ப் படங்கள், 5 மலையாளப் படங்கள், 3 தெலுங்குப் படங்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 29 படங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் ‘லாபத்தா லேடீஸ்’ படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது லாபத்தா லேடீஸ்.
தமிழில் மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், வாழை, ஜமா ஆகிய 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது.