கேரள லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளராகி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கேரளாவில் இன்று (செப். 2) தொடங்கவுள்ள கேரள லீக் கிரிக்கெட் போட்டியில் கொச்சி, திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் உட்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டிக்கான விளம்பர தூதராக மோகன்லால் நியமிக்கப்பட்டார்.
இதில் அதானி அணியுடன் கைகோர்த்து திருவனந்தபுரம் ராயல்ஸின் இணை உரிமையாளராகி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த அணியின் மற்றொரு இணை உரிமையாளராக இருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.
இந்நிலையில் இது குறித்து கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னுடைய குரு பிரியதர்ஷனுடன் எனது சினிமா பயணம் தொடங்கியது. தற்போது அவருடன் இணைந்து இந்த புதிய முயற்சியில் களமிறங்குவது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.