
இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நடிகர் கவின் அடுத்ததாக கிஸ் என்கிற படத்தில் நடிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்த கவின், டாடா படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தற்போது, பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்துக்கு கிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சதீஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது. இசை - அனிருத்.