கார்த்திக் ராஜா என் நெருங்கிய நண்பர்: வனிதா விஜயகுமார் விளக்கம் | Vanitha Vijayakumar

"இந்தப் பிரச்னையில் அவருடைய பெயரை இழுக்க வேண்டாம். ராஜா அப்பா எனக்கு கடவுள் மாதிரி."
கார்த்திக் ராஜா என் நெருங்கிய நண்பர்: வனிதா விஜயகுமார் விளக்கம் | Vanitha Vijayakumar
படம்: https://x.com/vanithavijayku1
1 min read

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தனக்கு நெருங்கிய நண்பர் என வனிதா விஜயகுமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் & மிஸ்டர். இப்படத்தில் ராபர்ட் மாஸ்டர், கிரண், ஆர்த்தி கணேஷ், ஷகீலா, ஸ்ரீமான் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் படத்தைத் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் ஜனவரி 16 அன்றும் டிரெய்லர் கடந்த மே 25 அன்றும் வெளியான நிலையில், மிஸஸ் & மிஸ்டர் திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியானது.

இந்தப் படத்தில் மைக்கேல், மதன, காம, ராஜன் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிவராத்திரி' பாடல் இடம்பெற்றுள்ளது. இதன் பாடல் வரிகள் வீடியோ கடந்த மாதம் 23 அன்று வெளியானது. இப்பாடல் வெளியாவதற்கு முன் ஜூன் 22-ல் இளையராஜாவைச் சந்தித்து ஆசி பெற்றதாக படக்குழு சார்பில் போஸ்டர் வெளியானது. 'ராகதேவன் இசைஞானியின் நல்லாசியுடன் சிவராத்திரி தூக்கம் ஏது ஜூன் 23 முதல்' என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், படம் வெளியான நாளன்று 'சிவராத்திரி' பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையாராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, வனிதா விஜயகுமார் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் நடுவே, இளையராஜா வீட்டுக்கு, தான் மருமகளாகச் செல்ல வேண்டியவள் என்ற தொனியில் வனிதா விஜயகுமார் பேசியிருந்தார்.

"அந்த வீட்டில் நான் பூஜை செய்துள்ளேன். அந்த வீட்டுக்கு மிகவும் உழைத்திருக்கிறேன். அந்தக் குடும்பத்தில் நான் ஒருத்தி. நான் மருமகளாகச் செல்ல வேண்டியவள். இதற்கு மேல் சொல்ல முடியாது" என வனிதா விஜயகுமார் கூறியிருந்தார். வனிதா விஜயகுமாரின் மருமகளாச் செல்ல வேண்டியவள் என்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.

இந்நிலையில், இதற்கு வனிதா விஜயகுமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

"தெளிவுபடுத்த விரும்புகிறேன். கார்த்திக் ராஜா என் நெருங்கிய நண்பர். அவருடைய மனைவியும் எனக்கு நெருங்கிய நண்பர். இந்தப் பிரச்னையில் அவருடைய பெயரை இழுக்க வேண்டாம். ராஜா அப்பா எனக்கு கடவுள் மாதிரி. நான் அவருடைய சொந்தப் பிள்ளை போன்றவள். அப்படி தான் அவர்களுடைய குடும்பமும் என்னை நடத்துகிறது. விளைவுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்" என்று வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Vanitha Vijayakumar | Karthik Raja | Ilaiyaraaja | Mrs & Mr | Sivarathiri Song | Michael, Madana, Kama, Rajan

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in