அப்பாவிடம் அனுமதி வாங்கிவிட்டோம்: தனது இசை நிகழ்ச்சி குறித்து கார்த்திக் ராஜா

"நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, உல்லாசம் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களைப் பாடச் சொல்லி ரசிகர்கள் கேட்கிறார்கள்".
கார்த்திக் ராஜா
கார்த்திக் ராஜா

இளையராஜாவின் பாடல்களைப் பாட எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசியுள்ளார்.

கோவை நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் மாதம் 17 அன்று ‘கிங் ஆஃப் கிங்ஸ் 2024’ என்ற பெயரில், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக கார்த்திக் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, உல்லாசம் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களைப் பாடச் சொல்லி ரசிகர்கள் கேட்கிறார்கள். காப்புரிமை குறித்து ஆய்வு செய்து பாடல்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இளையராஜா பாடல்களையும் பாடுவேன். அதற்காக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளோம். அதிகபட்சமாக, 30-35 பாடல்களைப் பாட திட்டமிட்டுள்ளோம். 3-4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in