கார்த்தி
கார்த்தி @Karthi_Offl

சர்தார்-2 படத்துக்குப் பிறகு கைதி-2: கார்த்தி கொடுத்த அப்டேட்

“மீண்டும் அந்த பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன்”.
Published on

இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாக நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.

கடந்த மே 25 அன்று நடிகர் கார்த்தி தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ரத்த தான முகாம்கள் நடைபெற்றது.

இதில் சென்னையில் நடைபெற்ற ஒரு முகாமில் கலந்துகொண்ட கார்த்தி தனது அடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகளை கொடுத்துள்ளார்.

கார்த்தி பேசியதாவது:

“இரண்டு படங்கள் முடிந்துவிட்டன, இந்தாண்டு கண்டிப்பாக அவை வெளியாகும். அடுத்து சர்தார் 2 துவங்க இருக்கிறது. அடுத்த வருடம் கைதி- 2 தொடங்கும். மீண்டும் அந்த பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

எனவே, பிரேம் குமார் இயக்கத்தில் ‘மெய்யழகன்’ மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ ஆகிய படங்கள் இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in