லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளன்று உறுதியான கைதி 2 படம்!

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளன்று உறுதியான கைதி 2 படம்!
1 min read

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதையடுத்து நடிகர் கார்த்தி, லோகேஷ் கனகாரஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

டில்லி மீண்டும் வருகிறான். மற்றொரு அட்டகாசமான வருடம் உங்களுக்கு அமையட்டும் என்று கூறியதுடன் லோகேஷ் கனகராஜுக்கு பிளாட்டினம் காப்பு அணியும் புகைப்படத்தையும் கார்த்தி, லோகேஷ் கனகராஜ், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு என மூவரும் இணைந்துள்ள மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் கைதி 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதை கார்த்தி உறுதிபடுத்தியுள்ளார்.

கார்த்தியின் வாழ்த்துக்குப் பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், நன்றி கார்த்தி சார். தில்லியை அட்டகாசமாக மீண்டும் கொண்டுவருவோம். பிறந்தநாள் பரிசுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in