
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வரும் ‘காந்தாரா எ லெஜண்ட் - சேப்டர் 1’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ல் வெளியான காந்தாரா படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதன் தொடர்ச்சியாக அதன் முந்தைய கதையாக ‘காந்தாரா எ லெஜண்ட் - சேப்டர் 1’ படத்தை இயக்கி வருகிறார் ரிஷப் ஷெட்டி.
இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகவுள்ளது.