காந்தாரா சாப்டர் 1: ரூ. 500 கோடி வசூலைக் கடந்து சாதனை | Kantara Chapter 1 |

‘காந்தாரா’ படத்தின் 78 நாள் வசூலை ஒரே வாரத்தில் கடந்த ‘காந்தாரா சாப்டர் 1’...
காந்தாரா சாப்டர் 1: ரூ. 500 கோடி வசூலைக் கடந்து சாதனை | Kantara Chapter 1 |
1 min read

காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான 8 நாள்களில் உலகளவில் ரூ. 509.25 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘காந்தாரா சாப்டர் 1’ கடந்த அக்டோபர் 2 அன்று வெளியானது.

ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவய்யா எனப் பல்வேறு நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை ஹோம்பளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

நிலவுரிமை மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்படம், பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்காக மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் வெளியான 8-வது நாளில் இப்படம் உலகளவில் ரூ. 509.25 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக காந்தாரா படம் வெளியாகி 78 நாள்களில் உலகளவில் ரூ. 450 கோடி வசூலித்திருந்த நிலையில், முதல் வாரத்திலேயே காந்தாரா சாப்டர் 1 அதனை முறியடித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in