
பிரபல கன்னட நடிகை ஷோபிதா உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமடைந்து, கடந்த 2015-ல் கன்னடத் திரையுலகில் அறிமுகமான ஷோபிதா, பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 படங்களிலும் ‘ஏடிஎம்’, ‘வந்தனா’ போன்ற பிரபல கன்னடப் படங்களிலும் நடித்தார்.
ஹைதராபாதில் வசித்து வந்த ஷோபிதா, தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷோபிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஷோபிதா உயிரிழந்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.