கன்னட நடிகரும், இயக்குநருமான துவாரகீஷ் காலமானார்

ரஜினி, ஸ்ரீ தேவி நடித்த ‘நான் அடிமை இல்லை’ படத்தை துவாரகீஷ் இயக்கியுள்ளார்.
கன்னட நடிகரும், இயக்குநருமான துவாரகீஷ் காலமானார்
கன்னட நடிகரும், இயக்குநருமான துவாரகீஷ் காலமானார்

கன்னட நடிகரும், இயக்குநருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். ரஜினி உட்பட பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1960-களில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானவர் துவாரகீஷ். இதைத் தொடர்ந்து 1985 முதல் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார்.

ரஜினி, ஸ்ரீ தேவி நடித்த ‘நான் அடிமை இல்லை’ படத்தை துவாரகீஷ் இயக்கியுள்ளார். பல திறமையான கலைஞர்களை கன்னட படங்களில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் துவாரகீஷ்.

இந்நிலையில் 81 வயதான துவாரகீஷ், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

துவாரகீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ரஜினி கூறியதாவது: “எனது நீண்ட கால நண்பரான துவாரகீஷின் மறைவு எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஒரு நகைச்சுவை நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி ஒரு பெரிய தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தன்னை உயர்த்தி கொண்டவர். அவருடனான பல நினைவுகள் என் மனதில் வந்து செல்கின்றன. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in