சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உட்பட பலரும் நடிக்கும் படம் கங்குவா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழாவில், “மூத்தவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அக்டோபர் 10 அன்று வேட்டையன் படம் வெளியாவதே சரியாக இருக்கும்” என்று சூர்யா பேசியிருந்தார்.
இந்நிலையில் ‘கங்குவா’ படம் நவம்பர் 14 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.