சூர்யாவின் ‘கங்குவா’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

3டி வடிவில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
சூர்யாவின் ‘கங்குவா’
சூர்யாவின் ‘கங்குவா’@Suriya_offl
1 min read

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ள படம் கங்குவா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 3டி வடிவில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் இதே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், ‘வேட்டையன்’ படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவித்த படக்குழுவினர், தேதி குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

logo
Kizhakku News
kizhakkunews.in