
கங்குவா படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கின் விசாரணை நவ.8-க்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், பல படங்களின் தயாரிப்புக்காக வாங்கிய ரூ. 99.22 கோடியில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் தரப்பில் பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளை (நவ.8) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.