‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்

இந்தியன்- 2 மற்றும் இந்தியன்- 3 படங்கள் குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளார் கமல்.
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ANI
1 min read

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பல பிரபலங்கள் நடித்துவரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில், நடிகர் கமல் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2023-ல் வெளியான விக்ரம் படத்துக்குப் பிறகு கமலின் படங்கள் வெளிவரவில்லை. இந்தியன்- 2, தக் லைஃப், இந்தியன்- 3 போன்ற படங்களில் நடிக்கும் கமல் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி இந்து நாளிதழுக்கு கமல் அளித்த பேட்டியில், “படத்தின் தரம் மிகவும் முக்கியம், எனவே வேலைகளை அவசரப்படுத்த முடியாது. இந்தியன்- 2, இந்தியன்- 3 படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்தன. இந்தியன்- 2 படத்தின் பின்னணி வேலைகளை முடித்தப்பின் இந்தியன்- 3 படத்தின் வேலைகளைத் தொடங்குவோம். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in