ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: வெளியானது இந்தியன் 2 டிரெய்லர்

முதல் பாகத்தை ஒப்பிடுகையில் கமல்ஹாசன் இதில் வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார். சண்டைக் காட்சிகள் எண்ணிக்கையில் கூடுதலாக, சமகாலத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: வெளியானது இந்தியன் 2 டிரெய்லர்
1 min read

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 1996-ல் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாகிறது. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் பிரீத் சிங், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, ஜெகன், விவேக், மனோபாலா எனப் பெரிய பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள்.

ஜூன் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அனிருத் இசையமைத்த பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், படக்குழுவினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். கமலின் உழைப்பைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் பேசினார். இதைத் தொடர்ந்து, டிரெய்லரும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியன் தாத்தா கதாபாத்திரம் இன்றைய சூழலில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தியன் 2 படம் என்பது தொடக்கத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அமைந்துள்ளன. முதல் பாகத்தை ஒப்பிடுகையில் கமல்ஹாசன் இதில் வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார். சண்டைக் காட்சிகள் கூடுதலாக சமகாலத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாகம் படப்பிடிப்பின்போது மூன்றாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இரண்டாம் பாகம் வரும் ஜூலை 12-ல் வெளியாகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in