.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கிய ‘கல்கி 2898 ஏடி’ படம் ரூ. 1100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பல பிரபலங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் ஜூன் 27 அன்று வெளியானது.
படம் வெளியாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் இப்படம் ரூ. 1100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்திய படங்களில் இதற்கு முன்னதாக தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2, ஜவான், பதான் ஆகிய படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்பட்டியலில் 7-வது படமாக கல்கி இணைந்துள்ளது.